Home நாடு சிலாங்கூர் சட்டமன்றம் கலைக்கப்பட்டது – அஸ்மின் அலி அறிவிப்பு!

சிலாங்கூர் சட்டமன்றம் கலைக்கப்பட்டது – அஸ்மின் அலி அறிவிப்பு!

762
0
SHARE
Ad

ஷா ஆலம் – சிலாங்கூர் சட்டமன்றம் இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில், இஸ்தானா ஆலம் ஷாவில் கலைந்ததாக அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி அறிவித்திருக்கிறார்.

சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா, 13-வது சிலாங்கூர் சட்டமன்றம் கலைவதற்கான பிரகடனம் மற்றும் ஒப்புதல் பத்திரத்தில் கையெழுத்திட்டதாக அஸ்மின் அலி தெரிவித்தார்.

“புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரையில், தற்போதைய அரசு காபந்து அரசாகச் செயல்படும். இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களையும், அவர்களின் உரிமைகளையும் தற்காப்பதற்கும், நானும், ஆட்சிக்குழுவில் இடம்பெற்றவர்களும் எங்களால் ஆன பங்களிப்பைக் கொடுத்திருக்கிறோம்.

#TamilSchoolmychoice

“மக்களால் வழங்கப்பட்ட ஆணை தற்போது மக்களிடமே திரும்ப ஒப்படைக்கப்பட்டிருக்கிறது” என அஸ்மின் அலி தெரிவித்தார்.

அஸ்மின் அலியின் அறிவிப்பிற்குப் பிறகு, அவரும், அவரது ஆட்சிக் குழு உறுப்பினர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட அரசு வாகனங்களை, மாநில செயலாளர் டத்தோ முகமது அமின் அகமது ஆஹ்யாவிடம் திரும்ப ஒப்படைத்தனர்.