Home உலகம் பைசா நகரின் சாய்ந்த கோபுரத்தில் சுற்றுலாப் பயணி பலி!

பைசா நகரின் சாய்ந்த கோபுரத்தில் சுற்றுலாப் பயணி பலி!

876
0
SHARE
Ad

ரோம் – உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் பைசா நகரின் சாய்ந்த கோபுரத்தைப் பார்வையிட்ட ஜப்பானைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி, கோபுரத்தின் 4-வது தளத்தை அடைந்த போது திடீர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த இச்சம்பவத்தின் போது, 63 வயதான அவர், சிரமப்பட்டு 4 தளங்களை ஏறியிருக்கிறார். அப்போது திடீரென மயக்கமடைந்து, சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார் என பைசா நகரின் மீட்புக்குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.

இச்சம்பவத்தால் நேற்று சாய்ந்த கோபுரம் மூடப்பட்டு, பொதுமக்கள் பார்வையிடுவது நிறுத்தப்பட்டது.