Home நாடு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்திற்கும் அதிகமான போனஸ் – அஸ்மின் அறிவிப்பு!

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்திற்கும் அதிகமான போனஸ் – அஸ்மின் அறிவிப்பு!

813
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலில், பக்காத்தான் கூட்டணி வெற்றி பெற்று, சிலாங்கூர் மாநிலம் மீண்டும் எதிர்கட்சியின் ஆட்சியின் கீழ் வந்தால், அரசாங்க ஊழியர்களுக்கு 3 மாதத்திற்கும் அதிகமான போனஸ் (ஊக்கத்தொகை) வழங்கப்படும் என அம்மாநில காபந்து மந்திரி பெசார் அஸ்மின் அலி இன்று புதன்கிழமை அறிவித்திருக்கிறார்.

“3 மாத (போனஸ்) அவ்வளவு பெரிய தொகை அல்ல. ஆனால் இது நியாயமான ஒன்று, இதற்கு மேல், மதிப்பீடு மற்றும் செயலாக்கத்தின் அடிப்படையில், 3 மாதங்களுக்கும் கூடுதலாக வழங்கப்படும்” என அஸ்மின் அலி தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மாநில வரவு செலவு திட்ட அறிக்கையில், சிலாங்கூர் அரசாங்க ஊழியர்களுக்கு, 94.65 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில், 3 மாத போனஸ் வழங்கப்படும் என அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice