கோலாலம்பூர் – வரும் மே 9-ம் தேதி, 14-வது பொதுத்தேர்தல் அன்று பொதுவிடுமுறை அளிக்கப்படுவதாக இன்று புதன்கிழமை காபந்து பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்தார்.
நேற்று தேர்தல் ஆணையம், வரும் ஏப்ரல் 28-ம் தேதி 222 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 587 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்புமனுத்தாக்கல் நடைபெறும் என்றும், மே 5-ம் தேதி முன்கூட்டிய வாக்குப்பதிவும், மே 9-ம் தேதி பொதுத்தேர்தலும் நடைபெறும் என்றும் அறிவித்திருந்தது.
இந்நிலையில், மே 9-ம் தேதி புதன்கிழமை வேலை நாள் என்பதால் வெளிமாநிலங்களில் வசிப்பவர்கள் வாக்களிப்பது கடினம் என்று மலேசியர்கள் பலரும் கருத்துத் தெரிவித்தனர்.
இதனையடுத்து, நஜிப் பொதுத்தேர்தல் அன்று பொதுவிடுமுறை அறிவித்தார்.