Home உலகம் இந்தோனிசியாவில் கள்ளச்சாராயம் குடித்து 82 பேர் பலி!

இந்தோனிசியாவில் கள்ளச்சாராயம் குடித்து 82 பேர் பலி!

787
0
SHARE
Ad

ஜகார்த்தா – இந்தோனிசிய தலைநகர் ஜகார்த்தா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் அதிகமானோர், கடந்த வாரம் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

அவர்களில் 82 பேருக்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்துவிட்ட நிலையில், இன்னும் 90-க்கும் அதிகமானோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில், அவர்கள் அனைவரும் சந்தையில் கள்ளத்தனமாக விற்கப்படும் பூட்லெக் என அழைக்கப்படும் ஒரு மதுவை வாங்கிக் குடித்திருப்பதை காவல்துறையினர் கண்டறிந்திருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

அம்மதுவில் இருமல் மருந்து, பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட திரவங்கள் கலந்திருந்ததும் கண்டறியப்பட்டிருக்கிறது.