புத்ராஜெயா – கடந்த 60 ஆண்டுகளாக வயலினைத் தொடாமல் இருந்த, முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் துணைவியார் டாக்டர் சித்தி ஹாஸ்மா முகமது, கடந்த 2016-ம் ஆண்டு தான் மீண்டும் அதைக் கையில் எடுத்தார்.
வயது முதிர்ச்சி காரணமாக அவரது கண் பார்வை மங்கியதால், அவரால் தொடர்ந்து வயலின் வாசிக்க முடியாத நிலைமை இருந்தது.
இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பான் நிதி திரட்டும் நிகழ்ச்சியில், சித்தி ஹாஸ்மா மீண்டும் வயலினை எடுத்து வாசித்தார்.
91 வயதான சித்தி ஹாஸ்மா, கண் பார்வை மங்கிய நிலையிலும், வயலின் வாசித்தது அங்கிருந்த பக்காத்தான் ஆதரவாளர்களை நெகிழ்ச்சியிலும் கண்ணீரிலும் ஆழ்த்தியது.
சித்தி ஹாஸ்மா வயலின் வாசிக்க, பக்காத்தான் ஹராப்பான் குறித்து தான் எழுதிய கவிதையை வாசித்தார் மகாதீர்.
நிகழ்ச்சியின் இறுதியில் சித்தி ஹம்சா வாசித்த வயலின் 35,000 ரிங்கிட்டுக்கு ஏலம் விடப்பட்டது.
மகாதீரின் தீவிர ஆதரவாளரான அஜிஸ் இப்ராஹிம் என்பவர் அந்த வயலினை 35,000 ரிங்கிட் கொடுத்து வாங்கினார்.