Home நாடு ஹிண்ட்ராப்பை பிரதிநிதியாக்க இந்தியர்கள் விரும்புகின்றனர்: வேதமூர்த்தி

ஹிண்ட்ராப்பை பிரதிநிதியாக்க இந்தியர்கள் விரும்புகின்றனர்: வேதமூர்த்தி

1044
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாடாளுமன்றத்தில் தங்கள் சார்பில் ஹிண்ட்ராப் பிரதிநிதிக்க வேண்டுமென்று மலேசிய இந்திய சமுதாயத்தினர் விரும்புகின்றனர் என ஹிண்ட்ராப் தலைவர் பொன்.வேதமூர்த்தி இன்று வியாழக்கிழமை தெரிவித்திருக்கிறார்.

புத்ராஜெயாவில் இன்று பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேதமூர்த்தி, “7 மாநிலங்களைச் சேர்ந்த ஹிண்ட்ராப்பின் முக்கியத் தலைவர்கள் மற்றும் களத்தில் இறங்கிப் பணியாற்றி வரும் தன்னார்வலர்கள் ஆகியோருடன் இன்று இந்தக் கூட்டம் நடைபெற்றது.

“கடந்த 11 மாதங்களாக, கிட்டத்தட்ட 1 வருடமாக ஆயிரக்கணக்கான மக்களோடும், வாக்காளர்களோடும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். பாரிசான் நேஷனலை வெளியேற்ற நமக்கு ஒரு சிறந்த வாய்ப்பு இருக்கிறது. ஒரு மாற்றத்தைக் கொண்டு வரத் தயாராகுங்கள். புதிய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் மீது நம்பிக்கை வையுங்கள் என்று மக்களிடம் கூறி வருகின்றோம்.

#TamilSchoolmychoice

“இந்திய மக்களைப் பொறுத்தவரையில், அவர்கள் சார்பில் நாடாளுமன்றத்தில் பிரதிநிதி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஹிண்ட்ராப் அவர்களைப் பிரதிநிதிக்க வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். இந்த உண்மையை யாராலும் மறுக்க முடியாது. இன்று கூட (கூட்டத்தில்) அதனை ஒப்புக் கொண்டார்கள்” என வேதமூர்த்தி கூறியிருக்கிறார்.