Home நாடு ரொக்கப் பணம், மடிக்கணினி, ஐபேட் – 2 மில்லியன் மதிப்புள்ள பொருட்களை வழங்கினார் அஸ்மின்!

ரொக்கப் பணம், மடிக்கணினி, ஐபேட் – 2 மில்லியன் மதிப்புள்ள பொருட்களை வழங்கினார் அஸ்மின்!

966
0
SHARE
Ad

கோலாலம்பூர் – புக்கிட் அந்தபங்சா, கோம்பா தொகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு நேற்று சனிக்கிழமை, ரொக்கப் பணம், மடிக்கணினி, ஐபேட் உள்ளிட்ட 2 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை வழங்கினார் சிலாங்கூர் காபந்து மந்திரி பெசார் அஸ்மின் அலி.

உக்கே பெர்டானா, கம்போங் கெர்டாஸ் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு 500 முதல் 1000 ரிங்கிட் வரையிலான ரொக்கப் பணமும், மாணவர்களுக்கும், கிராமப்புறத் தலைவர்களுக்கும் மடிக்கணி, ஐபேட் உள்ளிட்ட பொருட்களையும் வழங்கினார். அதன் மதிப்பு மொத்தம் 2.24 மில்லியன் என மலேசியாகினி தெரிவித்திருக்கிறது.

இதனிடையே, நிகழ்ச்சியில் பேசிய அஸ்மின் அலி, வரும் மே 9-ம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலை முன்னிட்டு கொடுக்கப்படும் நிதியுதவி அல்ல என்றும், வழக்கமாக சிலாங்கூர் அரசு வாரந்தோறும் கொடுக்கும் வழக்கமான உதவித்தொகை தான் என்றும் தெரிவித்தார்.