Home கலை உலகம் எங்க வீட்டு மாப்பிள்ளை: யாரையும் தேர்வு செய்யாமல் வெளியேறிய ஆர்யா!

எங்க வீட்டு மாப்பிள்ளை: யாரையும் தேர்வு செய்யாமல் வெளியேறிய ஆர்யா!

1131
0
SHARE
Ad

சென்னை – கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், கடந்த சில வாரங்களாக ஒளிப்பரபாகிக் கொண்டிருந்த ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இறுதிச்சுற்றுக்குத் தேர்வாகியிருந்த அகதா, சூசனா மற்றும் சீதாலஷ்மி ஆகிய மூவரில் ஒருவரை, நடிகர் ஆர்யா தேர்வு செய்து அவரையே திருமணம் செய்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இறுதியில் யாரையுமே தேர்வு செய்யாத ஆர்யா, மூவரில் யாரையாவது ஒருவரைத் தேர்வு செய்து மற்ற இருவரைப் புண்படுத்த விரும்பவில்லை என்று கூறினார்.

#TamilSchoolmychoice

மேலும், நிகழ்ச்சியில் இருந்து ஒவ்வொருவரையாக வெளியேற்றுவதை தான் விரும்பவில்லை என்பதையும் ஆர்யா ஒப்புக் கொண்டார்.

ஆர்யாவின் இந்த பதில் அந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்து வந்தவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்ததோடு, மிகுந்த அதிருப்தியடைந்து நட்பு ஊடகங்களில் ஆர்யாவை வறுத்தெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.