Home நாடு மஇகா சட்டவிதித் திருத்தங்கள் சங்கப் பதிவகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டன

மஇகா சட்டவிதித் திருத்தங்கள் சங்கப் பதிவகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டன

762
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று புதன்கிழமை (18 ஏப்ரல் 2018) பிற்பகலில் மஇகா தலைமையகத்தில் மஇகாவுக்கான பிரத்தியேக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர், நடத்தப்பட்ட மஇகா மத்திய செயலவைக் கூட்டத்தில் சில முக்கிய அறிவிப்புகளை மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் வெளியிட்டார் என மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதலாவதாக, மஇகா சட்டவிதிகள் குறித்து கடந்த ஆண்டு மஇகா பொதுப் பேரவையில்  நிறைவேற்றப்பட்ட சட்டவிதித் திருத்தங்கள் சங்கப் பதிவகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டன என்றும், இனி அந்த சட்டவிதித் திருத்தங்கள் நடைமுறைக்கு வரும் என்றும் டாக்டர் சுப்ரா அறிவித்தார் என மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன.

அடுத்ததாக, மஇகாவின் சட்ட ஆலோசகராக வழக்கறிஞர் டத்தோ செல்வம் மூக்கையா நியமிக்கப்பட்டிருப்பதாகவும் டாக்டர் சுப்ரா இன்றைய மத்திய செயலவையில் அறிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

மேலும், பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கட்சிக் கட்டுப்பாட்டை நிலைநிறுத்தும் வகையில், மஇகா ஒழுங்கு நடவடிக்கைக் குழு நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அதன் தலைவராக பேராக் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மஇகா தேசிய உதவித் தலைவர் டான்ஸ்ரீ வீரசிங்கம் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், அந்தக் குழுவுக்கு சில உறுப்பினர்களை நியமித்திருப்பதாகவும் டாக்டர் சுப்ரா இன்று நடைபெற்ற மத்திய செயலவையில் அறிவித்தார் என்றும் மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.