Home நாடு மஇகாவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது

மஇகாவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது

1016
0
SHARE
Ad

கோலாலம்பூர் – எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான மஇகாவின் பிரத்தியேகத் தேர்தல் அறிக்கையை இன்று புதன்கிழமை (18 ஏப்ரல் 2018) மஇகா தலைமையகத்தில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் வெளியிட்டார்.

தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து தேசிய முன்னணியின் மற்ற கட்சிகளும் தங்களின் தனித்தனி தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.

அந்த வரிசையில் மஇகாவும் சில குறிப்பிடத்தக்க அம்சங்களை உள்ளடக்கிய இந்திய சமுதாயத்திற்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

இன்று நடைபெற்ற தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் ஏராளமான கட்சி உறுப்பினர்களும், மஇகாவின் தலைவர்களும்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.