Home நாடு பக்காத்தான் வேட்பாளர்கள் பிகேஆர் சின்னத்தை தாராளமாகப் பயன்படுத்தலாம்

பக்காத்தான் வேட்பாளர்கள் பிகேஆர் சின்னத்தை தாராளமாகப் பயன்படுத்தலாம்

733
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் வேட்பாளர்கள் அனைவரும் ஒரே சின்னமாக பிகேஆர் சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு மலேசியத் தேர்தல் ஆணையம் சிக்கல்களை அல்லது தடைகளை விதிக்கலாம் என்ற அச்சத்தை பக்காத்தான் தலைவர்கள் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, அதற்கான விளக்கத்தை தேர்தல் ஆணையம் இன்று புதன்கிழமை (18 ஏப்ரல் 2018) வழங்கியிருக்கிறது.

“பக்காத்தான் வேட்பாளர்கள் பிகேஆர் கட்சியின் சின்னத்தை தாராளமாகப் பயன்படுத்தலாம். அவர்கள் பிகேஆர் கட்சியிடம் இருந்து அதற்கான அனுமதிக் கடிதத்தை மட்டுமே பெறவேண்டும். அது தவிர தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெறவேண்டியதில்லை” என தேர்தல் ஆணையத்தின் தலைவர் முகமட் ஹாஷிம் அறிவித்துள்ளார்.