Home கலை உலகம் மண்ணின் மைந்தர்களின் படைப்புகளோடு மின்னலின் “மண்ணின் நட்சத்திரம்”

மண்ணின் மைந்தர்களின் படைப்புகளோடு மின்னலின் “மண்ணின் நட்சத்திரம்”

1088
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மின்னல் எஃப்எம்மில் மலேசிய கலைஞர்களின் படைப்புகளைத் தாங்கி மலரும் நிகழ்ச்சி “மண்ணின் நட்சத்திரம்”.

இன்றைய நிகழ்ச்சியில், ‘பரமேஸ்வரா’ நாட்டிய நிகழ்ச்சி குறித்த தகவல்களை நேயர்களோடு பகிர்ந்து கொள்ள போகிறார் அஸ்தானா ஆர்ட்ஸ் நிறுவனர் ரவிசங்கர்.

ஏப்ரல் 27-ம் தேதி நடைபெறவுள்ள இந்த சரித்திர நாட்டிய நிகழ்ச்சியில் மலேசிய கலைஞர்களின் படைப்புகள் மிக சிறப்பாக அமைந்துள்ளதாகவும், வித்தியசமான படைப்பாக இருக்கும் என்று சொல்கிறார் ரவிசங்கர்.

#TamilSchoolmychoice

அதே வேளையில், வளரும் கலைஞர்களில் வரிசையில் தற்பொது புகழ் பெற்று வரும் மதன்குமார் சந்திப்பும் பிற்பகல் 12 மணி தொடக்கம் நேயர்கள் கேட்கலாம். ஏழு மலேசியப் பாடல்களை பாடியிருக்கும் மதன் குமார், தன்னுடைய பயணம் மற்றும் கலைத்துறையில் சாதிக்க துடிக்கும் அடுத்த லட்சியம் குறித்த தகவல்களை பகிர்ந்துக் கொள்கிறார்.

அதனைத் தொடர்ந்து, ‘வில்லவன்’ திரைப்படக் குழுவினரின் சந்திப்பு பிற்பகல் 1.15 தொடங்கி மண்ணின் நட்சத்திரத்தில் ஒலியேறும். மலேசிய திரைப்படமான ‘வில்லவன்’ நாடு முழுவதும் 19-ம் தேதி தொடங்கி திரையரங்கில் ஒடிக்கொண்டிருக்கிறது.

அந்தப் படத்தின் சுவாரசியமான அனுபவங்கள் நேயர்களோடு பகிர்ந்து கொள்கிறார் திரைப்படத்தின் கதாநாயகன் வினோத். 50-க்கும் மேற்ப்பட்ட மலேசிய கலைஞர்களோடு உருவாகியிருக்கும் ‘வில்லவன்’, மலேசியத் திரைப்படங்களில் அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் என நம்பப்படுவதாகவும் படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனின் அப்பாவுமாகிய டத்தோ ஸ்ரீ மோகன சுந்தரம், அத்திரைப்படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்த அனுபவத்தையும் நேயர்களோடு பகிர்ந்து கொள்கிறார்.

அவர்களோடு படத்தில் நடித்த லோகன் மற்றும் டத்தோ இஷ்வான் அவர்களின் சந்திப்பையும் நிகழ்ச்சியில் கேட்கலாம். மண்ணின் நட்சத்திர தயாரிப்பாளர் பிரேமா கிருஷ்ணனின் தயாரிப்பில், மலேசியக் கலைஞர்களின் படைப்புகளோடு ஒலியேறும் இந்நிகழ்ச்சியை வழி நடத்துகின்றார் ரவின். மலேசியக் கலைஞர்களின் படைப்புகளோடு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையும் ஒலியேறும் “மின்னலின் மண்ணின் நட்சத்திரம்” நிகழ்ச்சியில் இணைந்திருங்கள்.