Home நாடு கெடா மாநிலத் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி 2018

கெடா மாநிலத் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி 2018

1299
0
SHARE
Ad

கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம் ஏற்பாட்டில், நேற்று ஏப்ரல் 20-ம் தேதி வெள்ளிக்கிழமை, கெடா மாநில அளவிலான தகவல்தொடர்புத் தொழில்நுட்பப் போட்டி 2018 பாயா பெசார் அன்னை கருமாரியம்மன் ஆலய மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைப்பெற்றது.

கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம் கடந்த 34 ஆண்டுகளாக சமுதாய நலன் கருதி பயன்மிக்கத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இவ்வியக்கத் திட்டங்களில் ஒன்றானது தித்தியான் டிஜிட்டல் திட்டம்.

இத்திட்டமானது கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 9 வருடங்களாக செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம், தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உலகமய மாறுதலுக்கேற்ப தகவல் தொடர்புத் திறனறிவை (ICT) பெற்றிருப்பதை உறுதிப்படுத்தும் பொருட்டு சீரிய முறையில் செயல்வடிவம் காணப்பெற்று வருகின்றது.

#TamilSchoolmychoice

புறநகர், நகர்புற மாணவர்களிடையே அமையப்பெற்ற தகவல் தொடர்புத் திறனறிவை (ICT இடைவெளியை குறைக்க இத்திட்டம் பெரும் பங்காற்றி வருகின்றது. தித்தியான் டிஜிட்டல் திட்டம் அமைக்கப்பட்டதன் வழி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சுற்று வட்டார பொது மக்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் அமையப் பெற்றது.

தமிழ்ப்பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டியினை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம், மலேசிய தித்தியான் டிஜிட்டல் இயக்கம், மலேசிய சமுக  கல்வி அறவாரியம் (MCEF), மலேசிய உத்தம அமைப்பும் இணைந்து இப்போட்டியை வழிநடத்துகிறது.

இதில் 5 போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, அதில் தகவல் தொடர்புத் தொழில்நுட்ப புதிர்ப்போட்டி மாநில அளவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டிற்கு மைநாடி அறவாரியமும், இத்திட்டத்திற்கு SEDIC அமைப்பும் பேருதவிப் புரிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கெடா மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்ப புதிர்ப் போட்டியில் பெர்லிஸ் & கெடா முன்னால் இராணுவ வீரர்களின் அமைப்பின் அறங்காவலர் மு. கருப்பையா சிறப்பு பிரமுகராக கலந்துக் கொண்டு, மாணவர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கினார். அவர் தம் உரையில், பெற்றோர்கள் தகவல் தொடர்புத் தொழில்நுட்ப வளர்ச்சியில் பங்கெடுக்க வேண்டும் மேலும் அதன் தொடர் வளர்ச்சியை வாழ்க்கையில் செயல்ப்படுத்த வேண்டும், தொடர்ந்து சிறந்ததொரு பணியை செய்து வரும் கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்திற்க்கும், தித்தியான் டிஜிட்டல் திட்டத்திற்க்கும் தனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார். மேலும் எதிர்காலத்தில் தொழில்துறையில் தொழிநுட்பத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் அதில் கெடா மாநில மாணவர்கள் பெரிதும் முனைப்புக் காட்ட வேண்டுமெண்ரும் கேட்டுக்கொன்டார்.

கெடா மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில் நுட்ப புதிர்ப் போட்டியில் வெற்றிப் பெற்ற பள்ளிகள்:

* மாநில அளவிலான போட்டியில் வெற்றிப்பெற்ற முதல் 15 நிலை வெற்றியாளர்கள், தேசிய ரீதியிலான போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.