Home நாடு போர்ட்டிக்சன் மீண்டும் மஇகாவுக்கா?

போர்ட்டிக்சன் மீண்டும் மஇகாவுக்கா?

830
0
SHARE
Ad

போர்ட்டிக்சன் – நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மஇகாவுக்கு ஒதுக்கப்படவிருக்கும் ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதி போர்ட்டிக்சனா அல்லது ஜெலுபுவா என்ற இழுபறி கடந்த சில நாட்களாக நீடித்து வந்த நிலையில், தற்போது மஇகாவுக்கு மீண்டும் போர்ட்டிக்சன் தொகுதியே ஒதுக்கப்படும் என நெகிரி செம்பிலான் மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனைத் தொடர்ந்து போர்ட்டிக்சன் தொகுதியில் (முன்பு தெலுக் கெமாங்) மீண்டும் டத்தோ வி.எஸ்.மோகனே (படம்) போட்டியிடுவாரா அல்லது ஜெலுபு தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி நிறுத்தப்படுவாரா என்ற கேள்வியும் மஇகாவினரிடையே எழுந்துள்ளது.

இதற்கு முன் வந்த தகவல்களின்படி வி.எஸ்.மோகன் டத்தோ மாணிக்கத்திற்குப் பதிலாக ஜெரம் பாடாங் தொகுதியில் போட்டியிடுவார் என்றும் ஜெலுபு தொகுதியில் தேவமணி போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

#TamilSchoolmychoice

தற்போது மீண்டும் போர்ட்டிக்சன் மஇகாவுக்கு ஒதுக்கப்பட்டால், அங்கு போட்டியிடப் போகும் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.