Home நாடு ஜெலுத்தோங்: சட்டமன்றத்திலிருந்து நாடாளுமன்றம் செல்கிறார் ராயர்

ஜெலுத்தோங்: சட்டமன்றத்திலிருந்து நாடாளுமன்றம் செல்கிறார் ராயர்

1128
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் – இன்று சனிக்கிழமை பினாங்கு முதல்வரும் ஜசெக தலைமைச் செயலாளருமான லிம் குவான் எங் அறிவித்த பினாங்கு மாநில ஜசெக வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் ஆர்.எஸ்.என்.ராயர் நாடாளுமன்ற வேட்பாளராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

2013 பொதுத் தேர்தலில் ஸ்ரீ டெலிமா சட்டமன்றத் தொகுதிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.எஸ்.என்.ராயருக்கு தற்போது ஜெலுத்தோங் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு தவணைகளாக ஜெலுத்தோங் தொகுதியைத் தற்காத்து வந்த ஜெப் ஊய்-க்கு இந்த முறை மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக ராயர் அங்கு நிறுத்தப்படுகிறார்.

#TamilSchoolmychoice

ஜெலுத்தோங் நாடாளுமன்றம் எப்போதுமே ஜசெக கோட்டையாக விளங்கி வந்துள்ளதால், அங்கு ராயர் எளிதாக வெல்ல முடியும் எனக் கருதப்படுகிறது.

பல தவணைகளாக ஜெலுத்தோங் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக மறைந்த கர்ப்பால் சிங் வெற்றி பெற்று வந்திருக்கிறார். அதனால் ‘ஜெலுத்தோங் புலி’ என்ற அடைமொழியையும் அவர் பெற்றிருந்தார்.

ஜசெக தலைவர்கள் சம்பந்தப்பட்ட பல வழக்குகளில் ஒரு வழக்கறிஞரான ராயர் வழக்காடி வந்திருக்கிறார்.

ஸ்ரீ டெலிமா சட்டமன்றத்தில், ராயருக்குப் பதிலாக ஷெர்லினா அப்துல் ரஷிட் என்ற மலாய் பெண் வேட்பாளர் நிறுத்தப்படுகிறார்.