Home இந்தியா உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டி – கமல் அறிவிப்பு!

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டி – கமல் அறிவிப்பு!

1137
0
SHARE
Ad

சென்னை – தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது அறிவித்தாலும் அதில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார்.

சென்னையில் மக்கள் நீதி மய்யம் சார்பில், மாதிரி கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகின்றது.
அதில், தமிழகத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு கிராம வளர்ச்சி குறித்துக் கலந்தாலோசித்து வருகின்றனர்.

இந்நிலையில், அக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன்,

“மக்களுக்கான சிம்மாசனத்தை வடிவமைத்து கொண்டிருக்கிறோம். நலமாக மக்கள் வாழும் பூமியை தயார் செய்து கொண்டிருக்கிறோம். கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அரசு புரிந்து கொள்ள வேண்டும். உள்ளாட்சி தான் நமது பலம். எப்போது உள்ளாட்சி தேர்தல் அறிவித்தாலும் மக்கள் நீதி மய்யம் அதில் போட்டியிடும்” என்று தெரிவித்தார்.