Home நாடு வான் அசிசா: ‘பிகேஆரில் ஒரே அணி தான் – அது எனது அணி’

வான் அசிசா: ‘பிகேஆரில் ஒரே அணி தான் – அது எனது அணி’

992
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பிகேஆர் வேட்பாளர்கள் பட்டியலில், சிலரது பெயர் விடுபட்டிருப்பதால், அக்கட்சியில் பிளவு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுவதை பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் மறுத்திருக்கிறார்.

இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய வான் அசிசா, “பிகேஆரில் இரண்டு அணிகளெல்லாம் இல்லை. ஒரே அணி தான். அதுவும் எனது அணி” எனத் தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே, பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது இது குறித்துக் கருத்துக் கூறுகையில், “வேட்பாளர் பட்டியலில் இருந்து விடுபட்டவர்களுக்கு அதிருப்திகள் ஏற்படுவது சகஜம் தான். பக்காத்தான் தலைமை அவர்களைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து முடிவுக்கான காரணத்தைத் தெரிவிக்கும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

மேலும், 14-வது பொதுத்தேர்தலில் போட்டியிட முடியாமல் போனவர்கள், தங்கள் அதிருப்திகளில் இருந்து விடுபட்டு, கட்சியின் நலனுக்காக ஒற்றுமையாக உழைக்க வேண்டும் என்றும் மகாதீர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.