பக்காத்தான் வெற்றி பெற்றால் மே 10, 11 இரண்டு நாட்கள் பொதுவிடுமுறை: மகாதீர்

    782
    0
    SHARE
    Ad

    கோலாலம்பூர் – வரும் மே 9-ம் தேதி நடைபெறவிருக்கும் 14-வது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெற்றால், அதற்கு அடுத்த நாளான மே 10-ம் தேதியும், 11-ம் தேதியும் இரண்டு நாட்கள் பொதுவிடுமுறை அளிக்கப்படும் என அக்கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

    மே 9-ம் தேதி புதன்கிழமை வருவதால், மலேசியர்கள் அன்றைய நாளில் விடுமுறை எடுத்தாவது பொதுத்தேர்தலில் வாக்களித்து தங்களது கடமையைச் செய்ய வேண்டும் என்றும், நாட்டின் நலனிற்காக இதனைச் செய்வதில் தவறில்லை என்றும் மகாதீர் தெரிவித்தார்.

    மேலும், மே 9-ம் தேதி பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெறும் பட்சத்தில் மே 10, 11 என இரு நாட்கள் பொதுவிடுமுறை அறிவிக்கப்படும் என்றும் மகாதீர் குறிப்பிட்டார்.

    #TamilSchoolmychoice

    இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய மகாதீர், “நான் பிரதமராகப் பதவி வகித்த போதும் வார நாளில் பொதுத்தேர்தல் நடந்திருக்கிறது. ஆனால் அப்போது இவ்வளவு மோசமாக இல்லை. வார நாளில் தேர்தல் நடத்துவது குறித்து அவ்வளவு எதிர்ப்புகள் இல்லை. ஆனால் இப்போது நிலைமை அப்படியல்ல” எனத் தெரிவித்தார்.