Home நாடு தேர்தல் 14: பாடாங் செராயில் கருப்பையா போட்டி- சுரேந்திரனுக்கு வாய்ப்பு இல்லை!

தேர்தல் 14: பாடாங் செராயில் கருப்பையா போட்டி- சுரேந்திரனுக்கு வாய்ப்பு இல்லை!

1013
0
SHARE
Ad
என்.சுரேந்திரன்

கோலாலம்பூர் – கெடா மாநிலத்தின் கீழ் வரும் நாடாளுமன்றத் தொகுதியான பாடாங் செராயில் இந்த முறை பிகேஆர் மத்திய ஆட்சிக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் சுரேந்திரனுக்குப் பதிலாக எம்.கருப்பையா நிறுத்தப்படுகிறார்.

கடந்த 2013-ம் ஆண்டுப் பொதுத்தேர்தலில், பாடாங் செராய் தொகுதியில் போட்டியிட்ட சுரேந்திரன் 34,151 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மசீச வேட்பாளர் ஹெங் சியாய் கீயை விட 8,437 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், சுரேந்திரனுக்கு மீண்டும் தனது தொகுதியைத் தற்காத்துக் கொள்ள வாய்ப்பு வழங்காதது அவரை அதிருப்திக்கு உள்ளாக்கியிருப்பதாகக் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

மேலும், பிகேஆர் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியுடன் காணப்படும் சுரேந்திரன், இது குறித்துக் கருத்துக் கூற மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இதனிடையே, அஸ்மின் அலி தலைமையிலான அணி, வான் அசிசாவுக்கு ஆதரவான ரபிசி ரம்லி தலைமையிலான அணி என பிகேஆர் கட்சி இரண்டாகப் பிளவு பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.