சிலாங்கூர் மாநிலத்திலுள்ள கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதியில், மஇகா மத்திய செயலவை உறுப்பினரும், மஇகா சிப்பாங் தொகுதி தலைவருமான வி.குணாளன் போட்டியிடுகிறார்.
இந்தத் தொகுதியில் பக்காத்தான் வேட்பாளராக அமானா கட்சியின் தேசியத் தலைவர் முகமட் சாபு போட்டியிடுகிறார்.

கோத்தா ராஜா தொகுதியில் பாஸ் கட்சியும் போட்டியிடுகிறது. அந்தக் கட்சியின் சார்பில் முகமட் டியா பின் பகாருன் போட்டியிடுகிறார்.
கடந்த 2013 பொதுத் தேர்தலில் கோத்தா ராஜா தொகுதியில் பாஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற சித்தி மரியா மாஹ்முட் இந்த முறை ஸ்ரீ செர்டாங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
கடந்த 2013 பொதுத் தேர்தலில் கோத்தா ராஜா தொகுதியில் 29,395 வாக்குகள் பெரும்பான்மையில் பாஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சித்தி மரியா வெற்றி பெற்றார்.
இங்கு பாஸ் மீண்டும் போட்டியிடுவதால் தேசிய முன்னணி, அமனா, பாஸ் என மும்முனைப் போட்டி கோத்தா ராஜாவில் ஏற்பட்டுள்ளது.
NEGERI | SELANGOR |
---|---|
Parlimen | P.111 – KOTA RAJA |
NAMA PADA KERTAS UNDI | PARTI |
MOHAMED DIAH BIN BAHARUN | PAS |
MOHAMAD BIN SABU | PKR |
V.GUNALAN A/L VELU | BN |