Home தேர்தல்-14 வேட்புமனு நிராகரிப்பு தொடர்பாக தியான் சுவா நீதிமன்றம் செல்லலாம்: தேர்தல் ஆணையர்

வேட்புமனு நிராகரிப்பு தொடர்பாக தியான் சுவா நீதிமன்றம் செல்லலாம்: தேர்தல் ஆணையர்

1124
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலில் பத்து நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடவிருந்த பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவாவின் வேட்புமனு கடைசி நேரத்தில் நிராகரிக்கப்பட்டது.

வழக்கு ஒன்றில் ஷா ஆலம் நீதிமன்றம் அவருக்கு விதித்த 2000 ரிங்கிட் அபராதம் காரணமாக அவரது வேட்புமனு நிராகரிப்படுவதாக அங்கிருந்த அதிகாரி அறிவித்தார்.

இந்நிலையில், மலேசியத் தேர்தல் ஆணையர் டான்ஸ்ரீ முகமது ஹாசிம் அப்துல்லா இது குறித்து தெரிவித்திருக்கும் கருத்தில், “தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தியான் சுவா நீதிமன்றத்தில் மனு அளிக்கலாம். வேட்புமனுத் தாக்கல் செய்ய அவர் முற்றிலும் தகுதி இழந்தவர் என இப்போது கூறிவிட முடியாது. நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதை வைத்து தான் முடிவு செய்ய முடியும்” எனத் தெரிவித்திருக்கிறார்.