Home தேர்தல்-14 கோல லங்காட் : சேவியர் ஜெயகுமார் (பிகேஆர்) – ஷாரில் சுபியான் (அம்னோ) போட்டி!

கோல லங்காட் : சேவியர் ஜெயகுமார் (பிகேஆர்) – ஷாரில் சுபியான் (அம்னோ) போட்டி!

867
0
SHARE
Ad

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள கோல லங்காட் நாடாளுமன்றத் தொகுதியில் பிகேஆர் கட்சியின் சார்பில் பக்காத்தான் கூட்டணியின் இந்திய வேட்பாளராக சேவியர் ஜெயகுமார் (படம்) போட்டியிடுகிறார்.

2008, 2013 பொதுத் தேர்தல்களில் ஸ்ரீ அண்டலாஸ் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற சேவியர் ஜெயகுமார், இந்த முறை நாடாளுமன்றத்திற்குப் போட்டியிடுகிறார்.

2008-2013 தவணைக் காலத்தில் சிலாங்கூர் மாநிலத்தின் ஆட்சிக் குழு உறுப்பினராகவும் சேவியர் பணியாற்றியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

அவர் முன்பு போட்டியிட்ட ஸ்ரீ அண்டலாஸ் சட்டமன்றத் தொகுதி தற்போது செந்தோசா எனப் பெயர் மாற்றம் கண்டுள்ளது.

NEGERI SELANGOR
Parlimen P.112 – KUALA LANGAT
NAMA PADA KERTAS UNDI PARTI
XAVIER JAYAKUMAR A/L ARULANANDAM PKR
SHAHRIL SUFIAN BIN HAMDAN BN
YAHYA BIN BABA PAS

 

கோல லங்காட்டில் சேவியரை எதிர்த்து அம்னோவின் ஷாரில் சுபியான் ஹம்டான் தேசிய முன்னணி வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

இங்கு பாஸ் கட்சியும் போட்டியிடுவதால் தேசிய முன்னணி, அமனா, பாஸ் என மும்முனைப் போட்டி கோல லங்காட்டில் ஏற்பட்டுள்ளது.

பாஸ் கட்சியின் சார்பில் யாஹ்யா பின் பாபா போட்டியிடுகிறார்.