Home நாடு வாங்சா மாஜூ: மைகார்டு சமர்ப்பித்ததால் டான் இயூ கியூ வேட்புமனு ஏற்கப்பட்டது!

வாங்சா மாஜூ: மைகார்டு சமர்ப்பித்ததால் டான் இயூ கியூ வேட்புமனு ஏற்கப்பட்டது!

1167
0
SHARE
Ad

கோலாலம்பூர் – வாங்சா மாஜூ நாடாளுமன்றத் தொகுதியில் பிகேஆர் சார்பில் போட்டியிடும் டத்தின் படுகா டான் இயூ கியூ, இன்று காலை வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த போது, தனது அடையாள அட்டையை எடுத்து வர மறந்துவிட்டார்.

இந்நிலையில், அவரது வேட்புமனுவை ஏற்க தேர்தல் அதிகாரி மறுத்துவிட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, சுபாங் ஜெயா வீட்டில் இருந்த டான் இயூ கியூவின் அடையாள அட்டையை எடுக்க அவரது உதவியாளர் விரைந்தார்.

#TamilSchoolmychoice

அதன் பின்னர், சரியான நேரத்தில் அவரது உதவியாளர் அடையாள அட்டையைக் கொண்டு வந்து சேர்த்ததால், டான் இயூ கியூ வேட்புமனுத் தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டார்.

வாங்சா மாஜூவில், தேசிய முன்னணி வேட்பாளர் இயோ தியோங் லூக், பிகேஆர் வேட்பாளர் டான் இயூ கியூ மற்றும் பாஸ் வேட்பாளர் ரசாலி பின் தும்ரின் ஆகியோருக்கு இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.