Home நாடு மகாதீர் சென்ற விமானத்தில் நாசவேலையா? – விசாரணை செய்ய சாஹிட் உத்தரவு!

மகாதீர் சென்ற விமானத்தில் நாசவேலையா? – விசாரணை செய்ய சாஹிட் உத்தரவு!

760
0
SHARE
Ad

கோலாலம்பூர் – லங்காவிக்கு செல்ல தான் பயன்படுத்திய விமானத்தில் நாசவேலை நடந்திருப்பதாக பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறியிருப்பது குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்படும் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்திருக்கிறார்.

பாகான் டத்தோ நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று சனிக்கிழமை தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்த சாஹிட், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கெடா காவல்துறைத் தலைவர் மற்றும் லங்காவி காவல்துறையிடமிருந்து எனக்கு இன்னும் முழு அறிக்கை கிடைக்கவில்லை. நான் காவல்துறையிடம் உடனடி விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறேன். ஜனநாயகத்தின் அடிப்படையில் அனைவருக்கும் பாதுகாப்பு என்பதை நிலைநாட்ட வேண்டும்.

“மகாதீருக்கு இப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டதற்கு வருந்துகிறேன். அவர் போட்டியிடக் கூடாது என்பதற்காக சில தரப்பினர் இதனைச் செய்திருக்கமாட்டார்கள் என நம்புகிறேன்” என்று சாஹிட் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

நேற்று லங்காவி தீவில் சீன மற்றும் இந்திய சமுதாயத்தினரிடையே நடைபெற்ற தேநீர் விருந்தில் கலந்து கொள்வதற்காக,  தனிவிமானம் ஒன்றில் மகாதீர் புறப்படத் தயாரான போது, அவ்விமானத்தின் சக்கரத்தில் ஓட்டை இருந்ததை விமானி கண்டறிந்ததாக மகாதீர் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.