Home நாடு கிளந்தான் கோலா பாலா சட்டமன்ற பிகேஆர் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு!

கிளந்தான் கோலா பாலா சட்டமன்ற பிகேஆர் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு!

686
0
SHARE
Ad

ஜெலி – கிளந்தான் மாநிலம் கோலா பாலா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று சனிக்கிழமை காலை வேட்புமனுத் தாக்கல் செய்த பிகேஆர் வேட்பாளர் டாக்டர் முகமது ஹபிட்ஸ் ரிசாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

முகமது ஹபிட்ஸ் ரிசாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை அதிகாரிகள் இன்னும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், ஜெலி நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் கோலா பாலா சட்டமன்றத்தில் பாஸ் வேட்பாளர் முகமது அஃபாண்டி முகமதுவிற்கும், தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ அப்துல் அசிஸ் டெராஷித்துக்கு இடையே இருமுனைப் போட்டி ஏற்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice