Home தேர்தல்-14 மகாதீர் மீது பொய்யான செய்தி வெளியிட்டதாக போலீஸ் புகார்!

மகாதீர் மீது பொய்யான செய்தி வெளியிட்டதாக போலீஸ் புகார்!

899
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தனது விமானத்தில் நாசவேலை நடத்தப்பட்டிருந்ததாக பொய்யான தகவலை, மகாதீர் வெளியிட்டதாகக் கூறி அவருக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மாநகரக் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ மஸ்லான் லாசிம் இதனை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், மகாதீர் தனது விமானத்தில் நாசவேலை நடந்திருப்பதாகப் பொய்யான தகவலை வெளியிட்டு, மலேசியர்கள் மத்தியில் பாதுகாப்பு குறித்த பீதியை ஏற்படுத்தியதாக அவருக்கு எதிராகப் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

அம்னோ அடிமட்ட இயக்கத் தலைவர் டத்தோ சுல்கார்னாயின் மாஹ்தார் இப்புகாரை அளித்திருக்கிறார்.