Home தேர்தல்-14 “உலகமே சிரிக்கும் படியாக ஊழல் நாடாக ஆக்கிவிட்டார் நஜிப்” – மகாதீர் முக்கிய அறிக்கை!

“உலகமே சிரிக்கும் படியாக ஊழல் நாடாக ஆக்கிவிட்டார் நஜிப்” – மகாதீர் முக்கிய அறிக்கை!

1365
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தாங்கள் போராடுவது அம்னோவுக்கு எதிராக அல்ல என்றும், அதன் தலைவராகத் தற்போது இருக்கும் நஜிப் துன் ரசாக்கால் அக்கட்சி அடைந்திருக்கும் மாற்றத்திற்கு எதிரானது என பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது அறிக்கை விடுத்திருக்கிறார்.

“பெர்சாத்து அம்னோவுக்கு எதிராக நிற்பதற்குக் காரணம் அம்னோ அல்ல. அது அம்னோவாக இல்லாததால் தான் எதிர்க்கிறோம். அம்னோக்காரர்களின் அனைத்துப் போராட்டங்களையும், நஜிப் அழித்துவிட்டார். ஒருகாலத்தில் உன்னதமாக உதித்த அக்கட்சி, இப்போது பெரும்பான்மையான மலாக்காரர்களால் வெறுக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்டுவிட்டது.

“நீங்கள் இந்த அறிக்கையை மறுக்கலாம். ஆனால், நஜிப்பின் தலைமைத்துவத்தில், பழைய அம்னோவாக அது இல்லை என்பதே உண்மை. அதனுடைய செயல்பாடுகளும், நோக்கமும் நஜிப்பின் குற்றங்களை சட்டப்பூர்வமாக்கமட்டுமே பயன்படுத்தப்படுவதால் தான் அவர் இன்னும் மலேசியாவின் பிரதமராக இருக்கிறார்.

#TamilSchoolmychoice

“நஜிப்புக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவு இன்னும் இந்த நாட்டின் நிலையை மோசமடைய தான் செய்யும். உலகத்தையே வியந்து பார்க்க வைத்த மலேசியா, தற்போது குற்றவாளிகளின் தலைமைத்துவத்தால், உலக நாடுகள் அனைத்தும் சிரிக்கும் படியாக, ஊழல் மிக்க நாடாக மாறிப்போனதை நீங்கள் இன்னும் உணரவில்லையா?” என மகாதீர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.