Home தேர்தல்-14 1எம்டிபி கருத்தரங்கில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்கவில்லை: நஜிப் அதிருப்தி!

1எம்டிபி கருத்தரங்கில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்கவில்லை: நஜிப் அதிருப்தி!

1046
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கிள்ளான் பள்ளத்தாக்கிலும், பினாங்கிலும் அண்மையில், 1எம்டிபி தலைமைச் செயலதிகாரி அருள் கந்தா கந்தசாமி ஏற்பாடு செய்திருந்த 1எம்டிபி கருத்தரங்கில் பக்காத்தான் தலைவர்கள் கலந்து கொள்ளாமல் இருந்தது தனக்கு மிகவும் அதிருப்தியை ஏற்படுத்துவதாக பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்திருக்கிறார்.

1எம்டிபி குறித்து காரசாரமாக விவாதிப்பவர்களுக்கு அருள் கந்தாவிடம் கேள்வி கேட்க நல்ல ஒரு வாய்ப்பாக இந்த கருத்தரங்கு அமைந்திருந்தது என்றும், ஆனால் எதிர்க்கட்சிகள் எப்போது அதனை வேறு வழிகளில் தான் கையாள்கிறார்கள் என்றும் நஜிப் தெரிவித்திருக்கிறார்.

“அவர்கள் எப்போதுமே பிரச்சினையை நட்பு ஊடகங்களில் பேச தான் விரும்புகிறார்கள். அவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க அருள் காத்திருந்தார். ஆனால் யாரையும் காணவில்லை. எல்லோரும் பொய்யை தான் விரும்புகிறார்கள்” என்றும் பட்டர்வர்த்தில் இன்று சனிக்கிழமை நஜிப் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice