Home தேர்தல்-14 தேர்தல் 14 முன்கூட்டிய வாக்குப்பதிவு: பிற்பகல் வரையில் 45% வாக்குகள் பதிவு!

தேர்தல் 14 முன்கூட்டிய வாக்குப்பதிவு: பிற்பகல் வரையில் 45% வாக்குகள் பதிவு!

909
0
SHARE
Ad

கோலாலம்பூர்- இன்று சனிக்கிழமை நடைபெற்ற 14-வது பொதுத்தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவில், பிற்பகல் வரையில் 45 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ முகமது ஹாசிம் அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.

“ஆயுதப் படைகளைச் சேர்ந்த 159,677 வாக்காளர்களும், ஓய்வு பெற்ற அதிகாரிகள் உட்பட காவல்துறையைச் சேர்ந்த 118,913 வாக்காளர்களும் இன்று தங்களது முன்கூட்டிய வாக்கைப் பதிவை செய்தனர்” என்று முகமது ஹாசிம் அப்துல்லா தெரிவித்தார்.

புக்கிட் அம்மானில் இன்று நடைபெற்ற காவல்துறையினருக்கான வாக்குப்பதிவில், முன்னாள் தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் கலந்து கொண்டு தனது வாக்கைப் பதிவு செய்தார்.