Home தேர்தல்-14 வாக்குச்சீட்டைப் படம் பிடித்து பேஸ்புக்கில் பதிவிட்டால் குற்றம்: தேர்தல் ஆணையம்

வாக்குச்சீட்டைப் படம் பிடித்து பேஸ்புக்கில் பதிவிட்டால் குற்றம்: தேர்தல் ஆணையம்

866
0
SHARE
Ad

புத்ராஜெயா – 14-வது பொதுத்தேர்தலில், வாக்காளர்கள் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ தங்களது வாக்குச்சீட்டுகளைப் புகைப்படம் எடுத்து, பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் பகிரக் கூடாது என்றும், அவ்வாறு பகிர்வது சட்டப்படி குற்றம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

இந்தக் கட்டுப்பாடு முன்கூட்டிய வாக்குகள், தபால் வாக்குகள் என அனைத்திற்கும் பொருந்தும் என்றும் தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ முகமது ஹாசிம் பின் அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.

மேலும், இக்குற்றத்தைப் புரிந்தவர்களுக்கு, தேர்தல் குற்றங்கள் சட்டம் 1954, பிரிவு 3-ன் கீழ், இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையோ அல்லது 5,000 ரிங்கிட் அபராதமோ விதிக்கப்படலாம் என்றும், அதற்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலிலும் இடம்பெறாது என்றும் முகமது ஹாசிம் பின் அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice