Home தேர்தல்-14 “வென்றுவிட்டோம்.. ஆனால் தேர்தல் ஆணையம் அறிவிக்க மறுக்கிறது” – மகாதீர் குற்றச்சாட்டு!

“வென்றுவிட்டோம்.. ஆனால் தேர்தல் ஆணையம் அறிவிக்க மறுக்கிறது” – மகாதீர் குற்றச்சாட்டு!

1588
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 112 நாடாளுமன்றத் தொகுதிகளில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெற்றுவிட்டதாகவும், ஆனால் தேர்தல் ஆணையம் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க மறுக்கிறது என்றும் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணித் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கிறார்.

 

“இப்போதே மிகவும் தாமதமாகிவிட்டது. யார் வெற்றியாளர்? யார் தோல்வியடைந்தவர்? என்பது இப்போதே தெரிந்தாக வேண்டும். தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திட மறுத்து தாமதப்படுத்த முயற்சி செய்கிறது.

#TamilSchoolmychoice

“தேர்தல் ஆணையம் அதன் கடமையைச் செய்யவில்லை. முடிவுகளை தடுத்து வைத்திருக்கிறது. அவர்கள் அனைத்து தொகுதிகளிலும் அதிகாரப்பூர்வமாக முடிவுகளை அறிவிக்க வேண்டும்” என சற்று முன்னர் பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கிறார்.