Home தேர்தல்-14 9.30 மணியளவில் பிரதமராகப் பதவியேற்கிறார் மகாதீர்!

9.30 மணியளவில் பிரதமராகப் பதவியேற்கிறார் மகாதீர்!

1169
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் இஸ்தானா நெகாராவில் மாமன்னர் சுல்தான் முகமட்டைச் சந்தித்த பக்காத்தான் கூட்டணித் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது அவருடன் பொதுத்தேர்தல் வெற்றி குறித்த பேச்சுவார்த்தை நடத்தினார்.

மகாதீருடன் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் உள்ளிட்ட பக்காத்தான் ஹராப்பான் கூட்டணித் தலைவர்களும் உடனிருந்தனர்.

இந்நிலையில், 14-வது பொதுத்தேர்தலில் பக்காத்தான் கூட்டணி வெற்றி பெற்றதற்கான ஆவணங்களை தேர்தல் ஆணையம் மாமன்னரிடம் சமர்ப்பித்தது.

#TamilSchoolmychoice

மேலும், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி சார்பில், பிரதமர் வேட்பாளராக மகாதீர் பதவியேற்பதற்கு 135 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் கையெழுத்து அடங்கிய ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டன.

இதனையடுத்து, இரவு 9.30 மணியளவில் துன் டாக்டர் மகாதீர் முகமது மாமன்னர் முன்னிலையில், மலேசியாவில் 7-வது பிரதமராகப் பதவியேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.