Home தேர்தல்-14 இராணுவத் தலைவர் – ஐஜிபி சந்திப்பு – ஆட்சி மாற்றம் சுமுகமாக நடைபெறும்

இராணுவத் தலைவர் – ஐஜிபி சந்திப்பு – ஆட்சி மாற்றம் சுமுகமாக நடைபெறும்

929
0
SHARE
Ad
ஐஜிபி முகமட் புசி ஹருண்

கோலாம்பூர் – இன்று வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ முகமட் புசி ஹருண், ஆட்சி மாற்றம் சுமுகமாக நடைபெறும் என உறுதியளித்தார்.

இராணுவத் தலைவர் ஜெனரல் டான்ஸ்ரீ ராஜா முகமட் அபாண்டி, கோலாலம்பூர் காவல் துறைத் தலைவர் டத்தோ மஸ்லான் லாசிம் மற்றும் அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ அலி ஹம்சா ஆகியோருடன் இன்று சந்திப்பு ஒன்றை நடத்தியதாகவும், இந்த சந்திப்பில் ஆட்சி மாற்றம் குறித்து விவாதித்ததாகவும் புசி ஹருண் தெரிவித்தார்.

(இடமிருந்து) – இராணுவத் தலைவர் அபாண்டி, அலி ஹம்சா, ஐஜிபி புசி ஹருண், கோலாலம்பூர் காவல் துறை தலைவர் மஸ்லான்

இதற்கிடையில் அந்த சந்திப்பு குறித்த புகைப்படம் ஒன்றையும் அரசாங்கத் தலைமைச் செயலாளர் அலி ஹம்சா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார் (படம்).

#TamilSchoolmychoice

எனவே, பொதுமக்கள் வதந்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்றும் ஒரு சில சிறு அசம்பாவிதங்களை காவல் துறை திறமையாகக் கையாண்டதாகவும் புசி ஹருண் மேலும் கூறினார்.

நாட்டின் பாதுகாப்பு சிறந்த முறையில் நிர்வகிக்கப்படுவதை நடந்து முடிந்த பொதுத் தேர்தல் எடுத்துக் காட்டியுள்ளதாகவும், காவல் துறை திறம்படச் செயல்பட்டதையும் புசி ஹருண் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.