Home நாடு “ஜிஎஸ்டி-க்கு பதிலாக எஸ்எஸ்டி” – மகாதீர் அறிவிப்பு!

“ஜிஎஸ்டி-க்கு பதிலாக எஸ்எஸ்டி” – மகாதீர் அறிவிப்பு!

2341
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பொருட்கள் மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) இரத்து செய்வதாக அறிவித்திருக்கும் பிரதமர் மகாதீர், அதற்குப் பதிலாக விற்பனை மற்றும் சேவை வரி (எஸ்எஸ்டி) அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவித்திருக்கிறார்.

நேற்று வியாழக்கிழமை மலேசியாவின் 7-வது பிரதமராகப் பதவியேற்ற துன் டாக்டர் மகாதீர் முகமது, பின்னர் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஷெரட்டன் தங்கும்விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, புதிய அரசாங்கம் குறித்தும், அமைச்சரவை குறித்து, நாட்டின் பொருளாதாரம் குறித்தும் பல்வேறு கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. அவற்றிற்கெல்லாம் ஒவ்வொன்றாக மகாதீர் பதிலளித்தார்.

#TamilSchoolmychoice

அதில் ஜிஎஸ்டி-ஐ இரத்து செய்வதாக அறிவித்திருக்கிறீர்கள்? என்றாலும், நாட்டின் பொருளாதார நிலையை எப்படி சமாளிக்கப்போகிறீர்கள்? என மகாதீரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த மகாதீர், “புதிய கூட்டரசு அரசாங்கத்தின் முதன்மை நோக்கமே நாட்டின் பொருளாதாரத்தில் அதிக கவனம் செலுத்தி, உலக சந்தையில் ரிங்கிட் மதிப்பை நிலையாக வைப்பது தான். ஜிஎஸ்டி-க்குப் பதிலாக எஸ்எஸ்டி அறிமுகப்படுத்தப்படும். எனக்கு அதில் கொஞ்சம் அனுபவம் இருப்பதால் அதனை சிறப்பாகக் கையாள முடியும் என நம்புகின்றேன்” எனத் தெரிவித்தார்.

மேலும், முந்தைய அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட  பொய் செய்திகள் சட்டம் 2018, சொஸ்மா ஆகியவை மறு ஆய்வு செய்யப்படும் என்றும் மகாதீர் உறுதியளித்தார்.

“நமக்கு பொய்யான செய்திகள் தேவையில்லை. அதேவேளையில் அது தொடர்பாக இயற்றப்பட்டிருக்கும் சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்படும்” என மகாதீர் கூறினார்.

மேலும், உலக அளவில் மலேசியா ஒரு ‘வர்த்தக – நட்பு நாடாக’ இருக்கும் என்றும் மகாதீர் தெரிவித்தார்.

-ஃபீனிக்ஸ்தாசன்