“அன்வாருக்கு முழு பொதுமன்னிப்பு வழங்குவதாக பேரரசர் லிம் குவான் எங்கிடம் தெரிவித்திருக்கிறார். அப்படி என்றால் அவருக்கு பொதுமன்னிப்பு மட்டுமல்ல உடனடியாக அவர் விடுதலை செய்யப்படலாம். எனவே நாங்கள் அன்வாரின் விடுதலைக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்” என மகாதீர் பக்காத்தான் ஹராப்பான் தலைமைத்துவக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், அன்வாருக்கு அமைச்சரவையில் பதவி கொடுக்கப்படுமா? எனக் கேள்வி எழுப்பப்பட்டதற்குப் பதிலளித்த மகாதீர், “அன்வார் முதலில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும். பிறகு தான் அமைச்சராக முடியும். அதற்கு இன்னும் அதிக நாட்கள் ஆகும்” என்று தெரிவித்தார்.