Home நாடு “வெளிநாடுகளிலிருந்து 1எம்டிபி நிதியை மீட்டெடுப்போம்” – மகாதீர் உறுதி!

“வெளிநாடுகளிலிருந்து 1எம்டிபி நிதியை மீட்டெடுப்போம்” – மகாதீர் உறுதி!

983
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஊழல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கிக் கொண்டிருக்கும் மலேசியாவின் 1எம்டிபி நிதியை மீட்டெடுப்போம் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது உறுதியளித்திருக்கிறார்.

நேற்று வியாழக்கிழமை மலேசியாவின் 7-வது பிரதமராகப் பதவியேற்ற துன் டாக்டர் மகாதீர் முகமது, பின்னர் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஷெரட்டன் தங்கும்விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, 1எம்டிபி நிதி குறித்துப் பேசிய மகாதீர், “1எம்டிபியை மீட்டெடுப்போம் என நம்புகிறொம். நமக்கெல்லாம் தெரியும் அந்நிதி தற்போது அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர் மற்றும் ‘ஜோலோ’ (தொழிலதிபர்), ‘ரோஸ்மா’ (நஜிப்பின் மனைவி) எனப் பலரிடம் சிக்கியிருக்கிறது. அவற்றை மீட்டெடுப்போம்” என உறுதியாகத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், பேங்க் நெகாரா அளித்திருக்கும் தகவலின் படி, தற்போது மலேசியாவின் தேசிய கடன் அளவு 800 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகாக இருக்கிறது என்றும், இன்னும் மறைமுகமாக இருப்பதையும் சேர்த்தால் அது 1 டிரில்லியன் ரிங்கிட் வரையில் கூட இருக்கலாம் என்றும் மகாதீர் தெரிவித்தார்.

-ஃபீனிக்ஸ்தாசன்