Home கலை உலகம் மலையாள நடிகருடன் காதல் இல்லை- மனம் திறந்தார் ஆண்ட்ரியா

மலையாள நடிகருடன் காதல் இல்லை- மனம் திறந்தார் ஆண்ட்ரியா

1152
0
SHARE
Ad

andriyaமார்ச் 28- மலையாளத்தில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ஃபஹத், பிரபல இயக்குனர் பாசிலின் மகன் ஆவார்.

இவரும் ஆண்ட்ரியாவும் “அன்னையும் ரசூலும்” என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள்.

சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு பேட்டியளித்த ஃபஹத், தான் ஆண்ட்ரியாவை காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் சொன்னார்.

#TamilSchoolmychoice

இதற்கு ஆண்ட்ரியா பதில் ஏதும் கூறாததால் இதனை உண்மை என்றே எல்லோரும் நினைத்தனர். இப்போது ஆண்டரியா ஃபஹத்தின் பேட்டி குறித்து மனம் திறந்திருக்கிறார்.

அதில் ஃபஹத்துடன் காதல் இல்லை என்பதை தெளிவாக கூறியிருக்கிறார். “ஃபஹத்தின் விருப்பம் எதுவாகவும் இருக்கலாம். ஆனால் எனக்கு இதில் சம்மதம் இல்லை.

இப்போதைக்கு நான் திருமணம் செய்து கொள்ளும் முடிவிலும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.