Home தேர்தல்-14 நஜிப் வீட்டின் பெட்டகம் துளையிட்டுத் திறக்கப்படுகிறது

நஜிப் வீட்டின் பெட்டகம் துளையிட்டுத் திறக்கப்படுகிறது

1410
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று புதன்கிழமை இரவு முதல் முற்றுகையிடப்பட்டு, சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் இல்லத்தில் இருக்கும் பாதுகாப்புப் பெட்டகம் ஒன்று (Safe locker) காவல் துறையினரால் துளையிடப்பட்டு (drill) உடைக்கப்படுவதாக நஜிப்பின் வழக்கறிஞர் ஹர்ப்பால் சிங் தெரிவித்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை அதிகாலை 5 மணி வரை நஜிப் இல்லத்தில் சோதனைகளை மேற்கொண்ட காவல் துறையினர், பின்னர் காலை 8.30 மணியளவில் முதலாவது மாடியில் இருக்கும் பாதுகாப்புப் பெட்டகம் ஒன்றைத் திறக்குமாறு உத்தரவிட்டனர். இருப்பினும் சுமார் 20 ஆண்டுகள் பழமையான அந்தப் பெட்டகத்தின் சாவி காணவில்லை எனக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பெட்டகத்தைத் துளையிட்டு, உடைத்துத் திறக்கும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டிருக்கின்றனர்.

மாலை 5.00 மணி வரை துளையிட்டு அந்தப் பெட்டகத்தை உடைத்துத் திறக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதனால், புனித ரமடான் மாதத்தின் முதல் நாளில் தங்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் நஜிப் குடும்பத்தினர் தெரிவித்ததாகவும் வழக்கறிஞர் ஹர்ப்பால் சிங் கூறியிருக்கிறார்.