Home தேர்தல்-14 மகாதீர் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்

மகாதீர் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்

1099
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – அடுத்த கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்பேன் என அறிவித்த ஒரே நாளில் பிரதமர் துன் மகாதீர் அந்தப் பொறுப்பை வேண்டாம் என்று துறந்திருக்கிறார்.

பக்காத்தான் தேர்தல் அறிக்கையில்  பிரதமராகப் பொறுப்பு வகிப்பவர் நிதி அமைச்சு உள்ளிட்ட அமைச்சுப் பொறுப்புகளை வகிக்க மாட்டார் என்று குறிப்பிடப்பட்டிருப்பதால் அந்த தேர்தல் அறிக்கைக்கு எதிராகச் செயல்படத் தான் விரும்பவில்லை என்றும் மகாதீர் கூறியிருக்கிறார்.

“கல்வி அமைச்சுப் பொறுப்பை வகிக்க நான் விரும்பினேன். எனினும், பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் தேர்தல் அறிக்கைக்கு எதிராக செயல்பட விரும்பவில்லை. எனவே கல்வி அமைச்சர் பொறுப்பை நான் ஏற்கப் போவதில்லை” என்றும் மகாதீர் கூறியிருக்கிறார்.