Home தேர்தல்-14 நஜிப் வீட்டுக் காவலில் இல்லை! வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொண்டார்

நஜிப் வீட்டுக் காவலில் இல்லை! வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொண்டார்

735
0
SHARE
Ad
தனது தாயாருடன் இருக்கும் புகைப்படத்தை நேற்று (17 மே) தனது டுவிட்டர் பக்கத்தில் நஜிப் வெளியிட்டிருந்தார்

கோலாலம்பூர் – கடந்த சில நாட்களாக முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தொடர்புடைய இல்லங்களில் நடத்தப்பட்டு வரும் அதிரடி சோதனைகளைத் தொடர்ந்து, தாமான் டூத்தாவிலுள்ள இல்லத்தில் நஜிப் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என சில தரப்புகள் ஐயம் தெரிவித்தன.

எனினும், அவர் விரும்பிய இடத்திற்குச் சென்றுவரத் தடையில்லை என்றும் அவர் வீட்டுக் காவலில் இல்லை என்றும் பின்னர் காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதற்கேற்ப, இன்று பிற்பகலில் புத்ரா உலக வாணிப மையத்தில் வெள்ளிக்கிழமை தொழுகையில் நஜிப் கலந்து கொண்டார். நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொண்ட நஜிப் பின்னர் அங்கு வந்திருந்த அம்னோ தலைவர்களுடன் ஓர் அறைக்குள் சென்று ஆலோசனையில் ஈடுபட்டார்.

#TamilSchoolmychoice

அம்னோவின் துணைத் தலைவர் பொறுப்பேற்றிருக்கும் ஹிஷாமுடின் ஹூசேன் ஓன், முன்னாள் அமைச்சர் அனுவார் மூசா ஆகியோரும் நஜிப்புடன் இணைந்து கொண்டனர்.

பத்திரிக்கையாளர்களிடம் நஜிப் எதுவும் பேசவில்லை.

இதற்கிடையில், நேற்று வியாழக்கிழமை தனது தாயாருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் நஜிப் வெளியிட்டிருந்தார். நோன்பு மாதத்தில் தாயாருடன் இருப்பதையும், நோன்பு துறக்கும் நேரத்திற்காக காத்திருப்பதையும் அந்தப் புகைப்படத்தோடு வெளியிட்ட செய்தியில் நஜிப் தெரிவித்திருந்தார்.