
புத்ரா ஜெயா – இன்று திங்கட்கிழமை காலை புத்ரா ஜெயாவில் முதன் முறையாக அரசு ஊழியர்களைச் சந்தித்த பிரதமர் துன் மகாதீர், அவர்களுக்கான தனது உரையை வழங்கினார்.
தான் பதவியேற்றது முதல் தற்போதைய அரசாங்க ஊழியர்களிடமிருந்தது எல்லாவித ஒத்துழைப்பும் கிடைத்து வருகிறது என மகாதீர் குறிப்பிட்டார்.
“எனினும், தவறு என்பது தவறுதான். யார் தவறு செய்திருந்தாலும், அந்தத் தவறு நாட்டின் சட்டங்களுக்கு ஏற்ப கையாளப்பட வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலமே நாட்டின் அரசு நிர்வாகத்தை நாம் தூய்மைப் படுத்த முடியும்” என்றும் மகாதீர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ அலி ஹம்சாவும் பிரதமரின் அரசு ஊழியர்களுக்கான உரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.