Home நாடு “நான் திருடவில்லை.. பழிசுமத்தப்பட்டேன்” – நஜிப் உருக்கம்!

“நான் திருடவில்லை.. பழிசுமத்தப்பட்டேன்” – நஜிப் உருக்கம்!

1451
0
SHARE
Ad

பெக்கான் – மக்கள் பணத்தை தான் திருடவில்லை என்றும், அரசியல் சூழ்ச்சியால் அவ்வாறு பழிசுமத்தப்பட்டேன் என்றும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் உருக்கமாகத் தெரிவித்திருக்கிறார்.

“மக்கள் பணத்தைத் திருடும் மனிதன் நான் இல்லை. பெக்கான் மக்களுக்கு என்னைப் பற்றி தெரியும். 42 ஆண்டுகளாக இங்குள்ள மக்களுக்கு சேவையாற்றியிருக்கிறேன்.

“இப்போது நான் குறிவைக்கப்பட்டிருக்கிறேன். காரணம் நான் பிரதமராகவும், அரசியல் தலைவராகவும் இருந்தேன். எனவே என்னுடைய பெயருக்குக் களங்கம் விளைவித்தால், நான் சார்ந்த அம்னோ கட்சியும் வலுவிழக்கும். அதுவே அரசியல் வியூகம்” என்று பெக்கானில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அம்னோ கூட்டத்தில் நஜிப் தெரிவித்திருக்கிறார்.