Home நாடு லிம் குவான் எங் ஊழல் வழக்கு: ஜூலை 30-க்கு ஒத்தி வைப்பு!

லிம் குவான் எங் ஊழல் வழக்கு: ஜூலை 30-க்கு ஒத்தி வைப்பு!

856
0
SHARE
Ad

ஜார்ஜ் டவுன் – முன்னாள் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கின் ஊழல் வழக்கு வரும் ஜூலை 30-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

மேலும், லிம் குவான் எங்கின் வழக்கறிஞர்கள், இவ்வழக்கில் லிம் மீதான குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்ய வேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் இவ்வழக்கு மேலாண்மைக்காக வந்த போது உயர்நீதிமன்ற நீதிபதி டத்தோ ஹாதாரியா சையத் இஸ்மாயில் ஜூலை 30-ம் தேதியை நிர்ணயித்தார்.

#TamilSchoolmychoice

லிம்மின் வழக்கறிஞர் ராம்கர்பால் சிங் இது குறித்து கூறுகையில், புதிதாகப் பொறுப்பேற்கும் அரசாங்கத் தலைமை வழக்கறிஞரிடம், லிம் மீதான குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்யும்படி கோரிக்கை வைப்போம் எனத் தெரிவித்தார்.