ஈப்போ – பேராக் மாநில பக்காத்தான் அரசாங்கத்தில் இடம்பெற்ற 10 ஆட்சிக்குழு உறுப்பினர்களும் நேற்று திங்கட்கிழமை தங்களது பணிகளைத் தொடங்கினர்.
அவர்களில் ஜசெக கட்சியைச் சேர்ந்த சுங்கை சட்டமன்ற உறுப்பினரான ஏ.சிவநேசனும் (படம்) ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
14-வது பொதுத்தேர்தலில், சுங்கை தொகுதியில் மஇகா வேட்பாளர் இளங்கோ, பாஸ் வேட்பாளர் அப்பளசாமி ஆகியோரை எதிர்த்துப் போட்டியிட்ட சிவநேசன் 9,631 வாக்குகள் பெற்று 6,493 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
NEGERI | PERAK |
---|---|
DUN | N.57 – SUNGKAI |
PARTI MENANG | PKR |
MAJORITI UNDI | 6493 |
NAMA PADA KERTAS UNDI | BIL. UNDI |
APPALASAMY A/L JETAKIAH (PAS) | 505 |
DATO’ V. ELANGO (BN) | 3138 |
A. SIVANESAN (PKR) | 9631 |
இதனிடையே, பேராக் மாநில சட்டமன்றத்தில் இதற்கு முந்தைய ஆட்சியில் சபாநாயகர்களாக இந்தியர்கள் நியமனம் செய்யப்பட்டு வந்த நிலையில், புதிய பக்காத்தான் அரசாங்கத்தில் அந்த இடம் யாருக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.
இந்நிலையில், ஹூத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதியில் பிகேஆர் சார்பில் போட்டியிட்ட மணிவண்ணன் தோல்வியடைந்தார்.
என்றாலும் வழக்கறிஞருமான அவர் பேராக் மாநில சபாநாயகராக நியமனம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.