கோலாலம்பூர் – (காலை 9.20 மணி நிலவரம்)
இன்று காலை 10.00 மணிக்கு புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் தனது வாக்குமூலத்தை வழங்கவிருக்கும் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக், இன்று செவ்வாய்க்கிழமை (மே 22) காலை 9.20 மணியளவில் தனது தாமான் டூத்தா இல்லத்திலிருந்து புறப்பட்டார்.
அவர் நேரத்தோடு ஊழல் தடுப்பு ஆணையத்தை சென்றடையும் நோக்கில், அவருக்கு போக்குவரத்துக் காவல் துறையினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக துணை செல்கின்றனர்.
நஜிப்புடன், நான்கு கார்களும் உடன் செல்வதால் அவரது வழக்கறிஞர் குழுவும் அவருடன் செல்வதாக அறியப்படுகிறது.
ஏராளமான பத்திரிக்கையாளர்கள் ஊழல் தடுப்பு ஆணையத்தில் நஜிப் வருகைக்காக குழுமியுள்ளனர்.
இதற்கிடையில் நஜிப்பின் வழக்கறிஞர் குழுவுக்கு முன்னாள் அரசாங்க தலைமை வழக்குரைஞர் (சொலிசிட்டர் ஜெனரல்) டத்தோ முகமட் யூசோப் சைனல் அபிடின் தலைமையேற்றுள்ளார்.