Home உலகம் உடல்நலம் குன்றிய ஜெட்லீயைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி!

உடல்நலம் குன்றிய ஜெட்லீயைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி!

1267
0
SHARE
Ad

ஒரு காலத்தில் ஹாலிவுட் படங்களில் நடித்து உலகப்புகழ் பெற்ற தற்காப்புக் கலையின் ஜாம்பவான் ஜெட்லீ அண்மையில் திபெத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு வருகை புரிந்தார்.

அவரைப் பார்த்த ரசிகர்கள் பேரதிர்ச்சியடைந்தனர். காரணம் 55 வயதான ஜெட்லி முதுகுத்தண்டுவடப் பிரச்சினையால் மிகவும் உடல்நலம் குன்றி காணப்பட்டார்.

கடந்த 10 ஆண்டுகளாக ஹைபர்தைராடிசம் மற்றும் முதுகு தண்டுவடப் பிரச்சினையால் அவதிப்பட்டு வரும் ஜெட்லீ மிக அதிக வலியைத் தாங்கிக் கொண்டு வாழ்ந்து வருகின்றார்.

#TamilSchoolmychoice

தினமும் தனது இதயத் துடிப்பை சீராக வைத்திருப்பதற்காக மருந்து உட்கொண்டு வருவதால், உடற்பயிற்சிகள் செய்ய முடியாமல் உடல்பெருத்து காணப்பட்டது ரசிகர்களை மிகவும் கவலையடையச் செய்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.