Home நாடு அல்தான்துயா கொலை விசாரணையை மீண்டும் தொடக்க வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் புகார்

அல்தான்துயா கொலை விசாரணையை மீண்டும் தொடக்க வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் புகார்

1257
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஜசெக கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங், மங்கோலிய அழகி அல்தான்துயா கொலை தொடர்பில் மீண்டும் விசாரணைகள் தொடங்கப்பட வேண்டும் என இன்று சனிக்கிழமை (26 மே) காவல் துறையில் புகார் ஒன்றை செய்திருக்கிறார்.

அந்தக் கொலையை செய்ததாக சைருல் அசார் உமார் மற்றும் அசிலா ஹட்ரி இருவரும் குற்றம் சாட்டப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டு விட்டாலும், அந்தக் கொலைக்கான நோக்கமும் அந்த கொலை மேற்கொள்ளப்பட்டதற்கான காரணமும் இன்னும் வெளிவரவில்லை என்பதால், புதிய விசாரணைகளின் மூலம் இந்த அம்சங்கள் வெளிக் கொணர்வதற்காக தான் புகார் செய்ததாக லிம் கூறியிருக்கிறார்.

புதிய தடயங்கள், சாட்சியங்கள் கிடைத்தால் அல்தான்துயா வழக்கு விசாரணை மீண்டும் திறக்கப்படலாம் என காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) புசி ஹருண் கூறியிருந்தார்.