பெர்னாமா பிரதிநிதியுடன் இது குறித்துப் பேசியுள்ளதாகவும், கூடிய விரைவில் தமிழ், சீன மொழி செய்திகளை ஒளிபரப்புவதன் மூலம் இந்திய, சீன சமூகத்தினர் பெரும் பயன்களை அடைய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த திங்கட்கிழமை மே 28-ஆம் தேதி அமைச்சரான பின்னர் முதன் முறையாக பெர்னாமாவுக்கு வருகை தந்த கோபிந்த் சிங் தமிழ், சீன மொழி செய்திகளை மீண்டும் ஒளிபரப்புமாறு உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து நேற்று புதன்கிழமை (மே 30) பத்திரிக்கையாளர் சந்திப்புக் கூட்டத்தில் பேசிய கோபிந்த் சிங் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவில் தமிழ், சீன செய்திகளை ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யுமாறு தான் பெர்னாமாவுக்கு உத்தரவிட்டுள்ளதாக அறிவித்திருக்கிறார்.