தனது வருகையின்போது பெர்னாமா மீண்டும் தமிழ் மொழி மற்றும் மாண்டரின் மொழியிலான செய்திகளைக் கொண்டு வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
பெர்னாமாவில் ஒரு காலகட்டத்தில் தமிழ்ச் செய்திகள் ஒளிபரப்பாகி வந்தன. ஆனால் பின்னர் நிறுத்தப்பட்டன.
அதன் பின்னர் ஓரிரண்டு முறை தனியார் மயப்படுத்தப்பட்ட திட்டத்தின்வழி பெர்னாமா தமிழ் செய்திகள் மீண்டும் ஒளிபரப்பாகும் என அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
எனினும் இன்றுவரை பெர்னாமா தொலைக்காட்சி அலைவரிசையில் தமிழ் மற்றும் பெர்னாமா செய்திகள் ஒளிபரப்பப்படவில்லை.
Comments